வாயில் நுரை! முழு மயக்கம்! காருக்குள் துடித்த பச்சிளம் குழந்தைகள்! பெற்ற தந்தையால் ஏற்பட்ட விபரீதம்!

தந்தையொருவர் காரிலேயே விட்டு சென்றதால் 2 குழந்தைகள் உயிரிழந்திருக்கும் சம்பவமானது அமெரிக்கா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் ஜுவான் ராட்ரீகஸ் இவருடைய மனைவியின் பெயர் மரிசா. இத்தம்பதியினருக்கு 4 வயது மதிக்கத்தக்க மகன் உள்ளார். லூனா மற்றும் போனெக்ஸ் என்ற இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.

பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பாதுகாப்பு மையத்தில் விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வழக்கம்போல சனிக்கிழமை அன்று ஜுவான் தன் குழந்தைகளை மையத்தில் விட காரில் சென்றுள்ளார். தன் 4 வயது மகனை விட்ட அவர், பின் இருக்கைகளில் அமர்ந்து இருந்த இரட்டையர்களை மறந்துவிட்டார். குழந்தைகளை கவனிக்காமலே அவர் வேலைக்கு சென்றுவிட்டார். 

பணி முடிந்த பிறகு வீடு திரும்புவதற்காக காரை எடுத்த போது குழந்தைகள் வாயில் நுரைதள்ளி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உதவிக்காக மருத்துவர்களை அழைத்துள்ளார். விரைந்து வந்த மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 8 மணி நேரமாக காரின் உள்ளேயே இருந்ததால் வெப்பம் அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

குழந்தைகள் இறந்ததற்காக ஜுவானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் விசாரணையின்போது,  "குழந்தைகளை பாதுகாப்பு மையத்தில் விட்டுச் சென்றதாகவே எண்ணினேன். ஆனால் என் குழந்தைகளை நானே கொன்று விட்டேன். இதை என்னால் சிறிதளவும் தாங்கி கொள்ள இயலவில்லை" என்று கதறினார்.

மரிசா கூறுகையில், "நடந்தவற்றை கெட்ட கனவாக நினைக்கிறேன். என் கணவர் குழந்தைகளை மிகவும் நேசித்தார். அவரை நான் இன்னும் நேசிக்கிறேன்" என்று அழுதார்.  இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.