ச்சீய்.. நீ எல்லாம் ஒரு அப்பனா? பெற்ற தந்தையை 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்த 2 மகள்கள்! அதிர வைக்கும் காரணம்!

பெற்ற தந்தையையே 3 மகள்கள் கொலை செய்துள்ள சம்பவமானது ரஷ்ய நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோ. மாஸ்கோவில் கிறிஸ்டினா(19), ஏஞ்சலினா(18), மரியா கச்சத்துரியன்(17) என்ற 3 சகோதரிகள் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய தந்தையின் பெயர் மைக்கேல் கச்சத்துரியன். இவருடைய வயது 57.

2014-ஆம் ஆண்டு முதல் மைக்கேல் தன்னுடைய 3 மகள்களுக்கும் பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார். வெளியுலகத்தினருடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது, 3 மேலும் ஏதேனும் தவறுகள் செய்தால் கடுமையாக தண்டித்தல் ஆகிய கொடுங்கோல் கொடூரத்தை மைக்கேல் 3 பேருக்கும் வழங்கியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஜுலை மாத தொடக்கத்தில் 3 பேரும் தங்களுடைய தந்தையை கொள்வது என்று முடிவெடுத்தனர். அதற்கான சரியான நேரம் வரும் வரை அவர்கள் காத்திருந்தனர். அதே மாதம் 27-ஆம் தேதியன்று வழக்கம்போல மைக்கேல் தன்னுடைய மகள்களை தொந்தரவு செய்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய அறைக்கு உறங்குவதற்காக சென்றுவிட்டார்.

இதுதான் சமயம் என்று முடிவெடுத்து சகோதரிகள் குடம் போன்ற பெரிய பொருளை எடுத்து மைக்கேலின் தலையில் பலமாக அடித்துள்ளனர். கிட்டத்தட்ட உடல் முழுவதிலும் 30 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். காயங்கள் ஏற்பட்ட இடங்களில் மிளகு ஸ்ப்ரே அடித்துள்ளனர். மேலும் மைக்கை துடிதுடித்து இறந்து போவதை கண்டு மூவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மைக்கேல் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தவுடன் 3 பேரும் அப்பகுதி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

3 பெண்களுக்கு ஆதரவாக அந்நாட்டில் பல லட்சக்கணக்கான பேர் குரல் கொடுத்துள்ளனர். குடும்பத்தை சார்ந்த ஒருவர் செய்யும் அத்துமீறல்களை தண்டிப்பதற்கு ரஷ்ய நாட்டின் சட்டத்தில் இடமில்லை. ஆகையால் காவல்துறையினரால் குடும்ப ரீதியில் நடவடிக்கைகள் எடுக்க இயலவில்லை. மேலும் 3 பேருக்கும் அதிகபட்ச தண்டனை வாங்கி தரவேண்டும் என்ற நோக்கத்தில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். 

இந்த வழக்கானது அந்நாட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.