ஆளுநரை திமுக சந்திப்பது அரசியல் நாடகம்- மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் தொடர்பாக ஆளுநரை திமுக தலைவர் மு க ஸ்டாலின் சந்திப்பது அரசியல் நாடகம் மட்டுமே என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.


கடந்த மாதம் 22ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் தமிழக அமைச்சர்கள் மீதான 97 பக்கங்கள் நிறைந்த ஊழல் புகார்களை ஏற்கனவே அளித்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை திமுகவின் பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழு ஆளுநரிடம் இரண்டாவது பட்டியலை அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஊழல் பட்டியல் தொடர்பாக ஆளுநரை சந்திப்பது திமுகவின் அரசியல் நாடகம் மட்டுமே என்று குற்றம்சாட்டி உள்ளார். நேரடி விவாதத்திற்கு அவர்களை வரச் சொல்லுங்கள். நாங்கள் தயார். மேலும் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கூறினாலும் அது உண்மையாகாது எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில்மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.