மு.க.அழகிரி தொடங்கும் த.க.தி.மு.க..? அதிர்ச்சியில் தி.மு.க.

ரஜினிகாந்த் கட்சியில் இணைவார் அல்லது பா.ஜ.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மு.க.அழகிரி விரைவில் தனிக் கட்சி தொடங்குவார் என்பது உறுதியாகியிருக்கிறது. இதற்காகு சென்னையில் வந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அது என்ன த.க.தி.மு.க. என்று தெரியுமா? தலைவர் கலைஞர் திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டியிருக்கிறாராம் அழகிரி. இந்த கட்சியின் மூலம் மதுரையை சுற்றிய பகுதிகளில் சுமார் 15% ஓட்டுகளையும் பிற ஏரியாக்களில் 5% ஓட்டுக்களையும் பிரிக்க முடியும் என்று அழகிரி நம்புகிறார்.

கடந்த தேர்தலில் ஒரே ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில்தான் தி.மு.க. தோற்றுப்போனது இந்த முறையும் அதேபோன்று தி.மு.க.வை இந்த முறையும் ஸ்டாலினை தோற்கடித்துவிடுவார் அழகிரி என்றுதான் தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது 

இதையடுத்து எப்படியாவது அழகிரியை சரிக்கட்டும் பொறுப்பை துரைமுருகன் வசம் ஒப்படைத்திருக்கிறாராம் ஸ்டாலின். அவர் ஊதிப் பெரிதாக்கிவிடுவார் என்பதுதான் உண்மையான நிலைமை.