5 வங்கிகள்! 9 கணக்குகள்! திமுகவினரையே வாய்பிளக்க வைக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் சொத்து மதிப்பு!

தன்னிடம் சொந்த கார் எதுவும் கிடையாது என்று, திமுக தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.


நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, திமுக சார்பாக, தென்சென்னை மக்களவை தொகுதியின் வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். அழகான வேட்பாளர், படித்தவர் என திமுக நிர்வாகிகளால் புகழப்படும் தமிழச்சி, தனது வேட்புமனுவை இன்று (மார்ச் 26) தாக்கல் செய்தார். 

அதில், தனக்கு, 5 வங்கிகளில், 9 சேமிப்புக் கணக்குகள் உள்ளதாகவும், ஆனால், தன்னிடமோ, தனது கணவரிடமோ கார் எதுவும் கிடையாது எனவும் தமிழச்சி கூறியுள்ளார். 

இது தவிர, ரூ.1.14 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் தனது பெயரிலும், ரூ.1.12 கோடி மதிப்புடைய அசையும் சொத்துகள் தனது கணவர் பெயரிலும் உள்ளதாக, தமிழச்சி குறிப்பிட்டுள்ளார். இது தவிர, இருவரது பெயரிலும் ரூ.1.87 கோடி மதிப்புள்ள அசையாத சொத்துகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழச்சிக்குச் சொந்தமாக டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் இருசக்கர வாகனமும், அவரது கணவர் சந்திரசேகர் பெயரில் ஹோண்டா ஆக்டிவாவும் உள்ளதாக, அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய அளவில் எந்த தொழிலும் செய்யாத நிலையில் தமிழச்சிக்கு எப்படி இவ்வளவு சொத்து என்று திமுகவினரே வாய் பிளக்கின்றனர்.