விவகாரத்துக்கான காரணம் என்ன? அது எனக்கு மட்டும் தான் தெரியும்! கணவனை பிரிந்தது குறித்து முதல் முறையாக வாய் திறந்த டிடி!

சென்னை: விஜய் டிவி புகழ் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி தனது திருமண தோல்வி பற்றி மனம் திறந்துள்ளார்.


கே.பாலச்சந்தரின் றெக்கை கட்டிய மனசு சீரியலில் அறிமுகமான திவ்யதர்ஷினி, அதில் இருந்து படிப்படியாக வாய்ப்பு கிடைத்து, விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக மாறினார்.தொடர்ந்து, 20 ஆண்டுகளாக, அவர் தொகுப்பாளினி வேலையை செய்து வருகிறார்.  இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்துள்ள டிடி, ''சமீபத்தில்தான் எனக்கு 35வது பிறந்த நாள் வந்தது. அதையொட்டி,இனிமே அஜித் சார் போல தலைக்கு ஹேர் டை அடிக்காமல் சால்ட் பெப்பர் லுக்கை பின்பற்ற தீர்மானித்துவிட்டேன்.

தற்போதைய நிலையில் நான் சிங்கிள்தான். எதிர்பாராமல் வந்தஒரு உறவு திடீரென பாதியிலேயே முறிந்துவிட்டது. ரிலேஷன்ஷிப் என்பது 2 பேர் சம்பந்தப்பட்ட விசயம், சூழ்நிலை காரணமா, அந்த லவ் உடையக்கூடும். எனக்கும் அப்படித்தான். என்னோட லவ் எப்படி பாதியிலேயே உடைஞ்சுபோச்சின்னு எனக்கு மட்டும்தான் தெரியும். ஆனா, சில பேர் இதுபத்தி விதவிதமா தகவல் பரப்பிட்டு இருக்காங்க. அவர்களை பற்றிஎனக்கு கவலையில்லை.

எனக்கு ஆதரவா நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவோடு நான் தொடர்ந்து வேலையை பார்த்து வருகிறேன். இருந்தாலும், காதல் பிரிவு எனக்குள்ஒருவித வேதனை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. அந்த வேதனையை நான் யாரிடமும் காட்டிக்க விரும்பல. என்னை பிரிஞ்ச போன நபருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு வந்துட்டேன்.

இதுவரை நாங்க 2 பேரும் ஒரு மெசேஜ் கூட அனுப்பிக்கல, போன் பண்ணிக்கூட பேசவும் இல்ல. விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துட்டு இருக்கு. எப்போ விவாகரத்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான்இப்போதைக்கு எனக்கு உள்ளது. மத்தபடி, அந்த லவ் தோத்துடுச்சி என்பதற்காக வாழ்க்கையை அப்படியே விட்டுட முடியாது.

என்னோட வேலையைதொடர்ந்து பார்க்க விரும்பறேன் ,'' என்று குறிப்பிட்டுள்ளார். திருமணமான குறுகிய காலத்திலேயே விவாகரத்து கேட்டு டிடி நீதிமன்றத்தை நாடிய விவகாரம், சின்னத்திரை உலகில் பரபரப்பாக பேசப்படும் விசயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.