படுக்கை அறையில் சடலமாக தொங்கிய பிரபல சீரியல் நடிகை..! நேரில் பார்த்து அதிர்ந்த பெற்றோர்! அதிர்ச்சி காரணம்!

கிரைம் பேட்ரோல் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் இளம் நடிகையான பிரெக்சா மேத்தா சடலமாக அவர் வீட்டில் தொங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மும்பையில் இருந்து மத்திய பிரதேசம் போபாலில் உள்ள தனது வீட்டிற்கு பிரெக்சா வந்துள்ளார். ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் அவர் வீட்டிலேயே முடங்கிவிட்டார். ஆனால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு புகைப்படங்களை பிரெக்சா வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் கனவும் மரணிக்கும் போது என்கிற கேப்சனுடன் புகைப்படம் ஒன்றை நேற்று இரவு கடைசியாக பிரெக்சா வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் காலை நீண்ட நேரமாகியும் அவர் தனது படுக்கை அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் உள்ளே சென்று பார்த்த போது பிரெக்சா சடலமாக தொங்கியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன பெற்றோர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சினிமா படப்பிடிப்புகள் முடங்கியதால் ஏற்பட்ட மன உலைச்சல் மற்றும் மன அழுத்தம் காரணமாகவே பிரெக்சா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.