மனித முகத்துடன் பிறந்த கன்றுக் குட்டி! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

மனித முகத்தோடு பசுமாடு பிறந்த சம்பவமானது அர்ஜென்டினாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வடக்கு அர்ஜென்டினாவில் இந்த அதிசய சம்பவமானது நிகழ்ந்துள்ளது. அந்த மாட்டை வளர்த்த விவசாயி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த மாட்டிற்கு மூக்கும், வாயும் இருந்துள்ளது. மேலும் 2 மணி நேரத்திற்கு அந்த மாடு உயிர் வாழ்ந்துள்ளது.

அந்த மாடானது புல்லின் மேல் படுத்து கிடந்துள்ளது. தன்னுடைய தலையின் கனத்தை தாங்க இயலாத காரணத்தினால் அந்த மாடு இறந்துள்ளது. அந்த மாடு சரியில்லாத மண்டைஓட்டுடன் பிறந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மரபணு நிபுணர் ஒருவர் கூறுகையில், "இது மிகவும் அசாதாரண மரபணு மாற்றமாகும். பசுங்கன்றின் டிஎன்ஏ வேறுபட்டதால் இது போன்ற பிறப்பு ஏற்பட்டுள்ளது. கெமிக்கல்கள், உயிரியல் மாற்றங்களினால் இதுபோன்ற அசாதாரண பிறப்புகள் ஏற்படுகின்றன" என்று கூறியுள்ளார். 

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.