பெண்களுக்கு இலவச சரக்கு! மனைவியுடன் ஓசி குடிக்கு சென்ற கணவன்! பிறகு பீமாஸ் ஹோட்டல் பப்பில் அரங்கேறிய ரகளை!

இலவச மதுவிற்கு மனைவியை அழைத்து வந்த நடன கலைஞர்கள் கலாட்டா செய்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வடபழனியில் புகழ் பெற்ற நட்சத்திர ஹோட்டலான "பீமாஸ்" இயங்கி வருகிறது. இந்த நட்சத்திர ஹோட்டலில் பார் மட்டும் நடத்துவதற்கு அனுமதியுள்ளது. நானாய் சட்டத்திற்குப் புறம்பாக ஒரு பப்பும் விளங்கி வருகிறது. இந்த பப்பில் பெண்களுக்கு மது இலவசமாக வழங்கப்படுகிறது. அதனால் இளைஞர்கள் தங்கள் காதலிகளின் மனைவியையும் அழைத்து சென்று தலைக்கேறும் அளவிற்கு மது அருந்துகின்றனர். 

இங்கு ஜோடியாக தான் என்னுடைய வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால் இளைஞர்கள் தங்களுடைய காதலிகள், மனைவிகள் அல்லது நெருங்கிய தோழிகளை அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருநகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் குமார். இவர் ஒரு சினிமா நடன கலைஞர் ஆவார்.

இவருடைய வயது 25. நேற்றிரவு இவர் தன் மனைவி மற்றும் 4 நண்பர்களுடன் பீமாஸ் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார். இலவச மது என்பதால் நண்பன் குமாரின் மனைவி அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்கினார். இதனால் பப்பில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. கணவன் மற்றும் மனைவி இருவருமே தலைக்கேரும் வரையில் மது அருந்தியுள்ளனர்.

மது அதிகமானதால் தன்னிலை மறந்த ஹேமந்த் குமாரின் மனைவி பப்பில் அநாகரீகமாக நடந்து கொள்ள தொடங்கினார். உடனே ஹேமந்த்குமார் கண்டிக்கவே கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதமானது பின்னர் கைகலப்பாக மாறி கணவன் மனைவி இருவருமே சண்டையிட்டு கொள்ள தொடங்கினர். 

பப்பிலிருந்து வெளியே வரும்போது வரும் கட்டியணைத்து புரண்டு சண்டை போட்டுக்கொணாடனர். இதனால் வடபழனியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. ஹேமந்த்குமாரின் மனைவி தன்னை பாதுகாத்து கொள்வதற்காக அருகிலிருந்த ஒரு கடைக்கு சென்றார். அந்த கடைக்காரரிடம் தஞ்சம் புகுந்த போது, ஹேமந்த் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடையை அடித்து நொறுக்கினர்.

உடனடியாக பொதுமக்கள் ஒன்று திரண்டு கடைக்காரரை காப்பாற்றி ஹேமந்த் குமார் மற்றும் அவரது நண்பர்களை கடுமையாக தாக்கினர். பின்னர் காவல்துறையினரை அழைத்து அவர்களை ஒப்படைத்தனர். இந்த சம்பவமானது வடபழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அனுமதியின்றி நடைபெறும் பப்பை மூட வேண்டும் என்பதே அப்பவே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது