எங்களை மன்னிச்சிடுங்க..! வீடியோ வெளியிட்டு இளம் காதல் ஜோடி செய்த பகீர் செயல்! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

பெற்றோர் எதிர்ப்பால் மனமுடைந்த காதல் ஜோடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் சங்கரூர் எனும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு அரவிந்தர் சிங் என்ற இளைஞர் வசித்து வந்தார். இவருக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தார் ஹர்பன்ஸ் கவுர் என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது காதலாக மாறி பல ஆண்டுகளுக்கு காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் செய்தி இருவீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் ஒத்துழைக்கவில்லை. இதனால் இருவரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாயினர்.

நேற்று முன்தினம் ஹர்பன்ஸ் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தகவல் தெரிந்து அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. 

நேற்று காலை வழக்கம் போல அரவிந்தர் சிங்கின் தந்தை தன்னுடைய தோட்டத்திற்கு சென்றார். அப்போது அரவிந்தரும், ஹர்பன்ஸும் குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹர்பன்ஸின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் ஒரு வீடியோவை எடுத்து தன் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். 

அந்த வீடியோவில், "பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன்பிறகு அரவிந்தர் அவருடைய நெஞ்சுப்பகுதியில் சுட்டு தள்ளுகிறார். ஹர்பன்ஸ் இறந்த பிறகு அரவிந்தர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்". 

இந்த சம்பவமானது பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.