ஊரடங்கு நாளில் பூங்காவில் உல்லாசம்..! பட்டப்பகலில் காதல் ஜோடியால் பரபரப்பு!

ஊரடங்கின் போது பட்டப்பகலில் பூங்காவில் காதல் ஜோடி உல்லாசம் அனுபவித்த சம்பவமானது இங்கிலாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,19,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 19,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதுவரை பிரிட்டன் நாட்டில் 88,621 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்நாட்டில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தலைநகரான லண்டனில் இந்த நோய் தொற்று அதிகளவில் பரவிவருகிறது. அந்நாட்டில் கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் தங்களுடைய மனஅழுத்தத்தை போக்கி கொள்வதற்காக குறிப்பிட்ட கால அளவிற்கு உடற்பயிற்சி கூடங்களும், பூங்காக்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

லண்டன் நகரத்தில் "செயின்ட் ஜேம்ஸ்" என்ற பூங்கா அமைந்துள்ளது. சென்ற சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் இந்த பூங்கா திறக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு காதல் ஜோடி இந்த பூங்காவிற்குள் நுழைந்து நடைபாதையில் உல்லாசம் அனுபவித்துள்ளனர். அவ்வழியில் நிறைய பேர் இரு சக்கர வாகனங்களிலும், சைக்கிள்களிலும் சென்று வந்துள்ளனர். காதல் ஜோடி உல்லாசம் அனுபவித்து வந்ததை அவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் குதிரையில் வலம் வந்து கொண்டிருந்த பாதுகாவலர்கள் காதல் ஜோடியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு அந்த காதல் ஜோடியும் பாதுகாவலர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாவலர்கள் அவர்கள் உடலுறவு செய்தது பிரித்து கூட கேள்வி எழுப்பவில்லை. ஏன் சமூக விடுதலை கடைபிடிக்கவில்லை என்றுதான் அவர்களுடைய பிரதான கேள்வியாக இருந்தது. 

இந்த காட்சிகளை எல்லாம் வீடியோவாக படமெடுத்த நபர், "இவர்களெல்லாம் விவஸ்தை கெட்டவர்கள்" என்ற கேப்ஷனில் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.