இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருக்கும், எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் சுமார் 95 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். 3500 பேர் வரை மரணமடைந்துள்ளதாகவும். இந்தியாவில் மட்டும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்படுள்ளதாக அடுத்தடுத்த அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.


சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகிலேயே இரண்டாவது மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில். கொரோனா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்படுள்ளதாக வந்துள்ள செய்தியால். மக்கள் மற்றும் இந்திய சுகாதாரத்துறை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளை முழுவதுமாக சோதனை செய்த பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு வரும் மார்ச் 10ம் தேதி முதல் சில நிபந்தனைகளை விதித்துள்ளது இந்திய அரசாங்கம்.

மேலும் சவுதி அரேபியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கான விசா முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அந்நாட்டு அரசாங்கம். இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக உலக பொருளாதாரம் தலைகீழாக மாறிவிட்டது என்றே கணிக்க முடிகிறது. ஆசிய பங்குச் சந்தை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதல் இந்தியாவில் பரவவில்லை என்றும். மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அண்டார்டிகா கண்டத்தை தவிர உலகின் 80 நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால். அடுத்து என்ன என்ற பயத்தில் உறைந்து போயுள்ளன உலக நாடுகள்.

ஜப்பான்.கொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் கடுமையாக பரவி வருகிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இந்த தாக்குதலில் சீர்குலைந்துள்ள ஈரான் அரசு. அந்நாட்டில் உள்ள 54 ஆயிரம் வெளிநாட்டு கைதிகளை விடுவித்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கம் ஒட்டுமொத்த சீனர்களையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக சீனா புத்தாண்டையொட்டி பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்தபோது இதன் தாக்குதல் உச்சத்தை தொட ஆரம்பித்தது. புத்தாண்டு விடுமுறைக்காக மற்ற நகரங்களுக்கு சென்ற மக்கள், சில தினங்களில் வீடு திரும்பிவிட போகிறோம் என்ற எண்ணத்தில் தங்களது செல்லப்பிராணிகளுக்கு தேவையான உணவுப்பொருட்களை வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தனர்.

ஆனால் அவர்கள் இன்னும் திரும்பாத நிலையில். இந்த செல்லப்பிராணிகளுக்கு உணவளிக்க யாரும் இல்லாத நிலையில். விலங்குகளுக்குள் சண்டை ஏற்பட்டு, அவை ஒன்றையொன்று கொன்று சாப்பிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பே அது குறித்து சீன அரசுக்கு எச்சரிக்கை செய் மருத்துவர் லீ வெண்லியாங் என்பவர் மரணமடந்துள்ள விவகாரம். சீனா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதே நிலை நீடித்தால் இந்தியாவில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தயாராக இருக்கும்படி எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

மணியன்