நித்தியானந்தாவை ஒருபோதும் கொரானா தாக்காது! ஏன் தெரியுமா? அவரே வெளியிட்ட பரபர தகவல்!

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் தனக்கு எந்நிலையிலும் பாதிப்பில்லை என்று நித்தியானந்தா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தலைமறைவாகியுள்ள நித்தியானந்தா உலக அளவில் ட்ரெண்டிங்காகி வருகிறார். இவர் ஒரு தனி நாட்டை உருவாக்கியுள்ளது ஆகவும், அதற்கு கைலாசம் என்று பெயரிட்டு இருப்பதாகவும் கூறி வைரலானார்.

அவர் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். குஜராத் மாநிலத்தில் அவர்மீது கடத்தல் வழக்கு பதிவாகியுள்ளது. அவரை கண்டுபிடிக்க இயலாமல் காவல்துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே "இன்டர்போல்" காவல்துறையினர், நித்யானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக "ப்ளூ கார்னர் நோட்டீஸ்" கொடுத்து அறிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 6400-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது.

1,24,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் தலைமறைவாகியுள்ள நித்யானந்தா கொரோனா வைரஸ் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எங்களுக்கு கொரோனா வைரஸால் எந்தவித பாதிப்பும் இல்லை. எங்களை பரமசிவன் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலராக செயல்பட்டு வருகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவானது சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.