திடீர் அதிசயம்..! கிடுகிடுவென குறையும் கொரானா பாதிப்பு எண்ணிக்கை! நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நிகழ்வுக்கு காரணம் இது தான்..!

கொரோனா வைரஸ் அதிகளவில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது குறைந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அந்நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 3300-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. சீனா நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 3,250-க்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் உயிரிழந்தனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 மற்றும் 500 மேற்பட்டோர் பலியாகி வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெறும் 70 முதல் 120 பேர் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கேட்டறிந்த போது பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகின. அதாவது, குரானா வைரஸ் பரவுவது கண்டறிந்த உடனே சீன அரசாங்கம் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

முதலில் தாக்குதல் ஆரம்பித்த வுஹன் மற்றும் ஹுபேய் ஆகிய நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டது. போர் நடக்க போர்க்கால நடவடிக்கைகள் இவ்விரு நகரங்களிலும் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டன. அதே போன்று மற்ற நகரங்களில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் அனைவரும் ரயில் மூலம் மேற்கூறப்பட்ட நகரங்களுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இத்தகைய முயற்சிகளினால் அவ்விரு நகரங்களை தவிர வேறெங்கும் கொரோனா வைரஸ் பரவவில்லை. அதேபோன்று ராணுவ அதிகாரிகளை வைத்து வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தினர். அவர்களுடைய உரிமைகளை முழுவதுமாக பறித்தனர். இது மனித உரிமைகளுக்கு எதிராக அமைந்திருந்தாலும், இத்தகைய முயற்சிகளால் மட்டுமே இந்த நோய் பரவாமல் அவர்களால் பார்த்துக்கொள்ள இயன்றது.

அதேபோன்று நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை கண்டறிவதற்காக சீன அரசாங்கம் உளவுத்துறையை பயன்படுத்தியது. புதிதாக யாரும் பாதிக்கப்பட்ட இரு நகரங்களிலும் அனுமதிக்கப்படாத காரணங்களினால் இந்த நோய் எளிதில் பரவ இயலவில்லை. ஆனால் நிபுணர்கள் இது போன்று பிற நாடுகளில் செய்வது சாத்தியமற்றது என்று கூறியுள்ளனர்.

இந்த செய்தியானது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது.