கொரோனாவுக்கு இப்போதைக்கு முடிவு இல்லை..! உலக சுகாதார நிபுணர் எச்சரிக்கை.

ஒருசில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவிட்டது,இனிமேல் அச்சப்படத் தேவையில்லை என்று சொல்லப்படும் நிலையில், கொரோனாவுக்கு இறுதிக் காலம் இப்போதைக்கு இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.


உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஆறு மாதங்களை கடந்திருக்கும் நிலையில் ஏராளமான உயிர்கள் பலியாகி உள்ளது. ஆனால் தொற்றின் அதிகப்படியான தாக்கம் இனி வரும் காலங்களில் அதிகரிக்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய தோற்று காரணமாக 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில் பாதி அளவு பாதிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தொற்று தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவை ஆட்டிப் படைக்கின்றது. கொரோனா தொற்று முடிந்துவிட வேண்டும் என அனைவரும் நினைத்து வருகின்றோம். நமது பழைய வாழ்க்கை எப்போது திரும்பும் என்றே காத்திருக்கின்றோம். ஆனால் தொற்று முடிவதற்கான சூழல் இப்போது இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

ஆக, மக்களே இந்த கொரோனா முடியும் வரையிலும் பணம், காசு பற்றி கவலைப்படாமல் உயிரை தக்கவைக்க முயற்சி செய்யுங்கள். அதுதான் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.