ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு அதிபதியான கூலித் தொழிலாளி! பிழைப்பு தேடி வந்தவருக்கு அடித்த செம அதிர்ஷ்டம்!

கேரளாவில் தொழிலாளி ஒருவருக்கு 1 கோடி ரூபாய் லாட்டரியில் கிடைத்துள்ள சம்பவமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்க மாநிலத்தில் 34 வயதான தஜ்முல்ஹக் என்பவர் பிறந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்பிற்காக கேரளா மாநிலத்திற்கு வந்துள்ளார். இவர் கோழிக்கோட்டில் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழில் செய்து வந்த இவர் திருமணமாகி 3 குழந்தைகளை பெற்றெடுத்தார்.

இதனிடையே சென்ற வாரத்தில் கேரளா அரசாங்கத்தின் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காருண்யா லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அந்த லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் விழுந்துள்ளது. உடனடியாக தன்னுடைய லாட்டரி சீட்டின் எண்னை தஜ்முல்ஹக் சரி பார்த்துள்ளார்.

தன்னுடைய சீட்டுக்கு தான் ஒரு கோடி ரூபாய் விழுந்துள்ளது என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, அவர் காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்தார். தன்னிடமிருக்கும் லாட்டரி சீட்டு யாரேனும் பறித்து விடக்கூடாது என்பதற்காக அவர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் லாட்டரி சீட்டை உறுதி செய்துகொண்ட பிறகு, அவரை உரிய வங்கிக்கு அழைத்து சென்றனர். 

பண பரிவர்த்தனை செய்து தரும்வரை காவல்துறையினர் அவருக்கு பாதுகாப்பாக இருந்தனர். காவல்துறையினரின் இந்த செயல்பாடானது அப்பகுதியில் இருந்த அனைவரையும் மகிழ வைத்துள்ளது. ஒரு கோடி ரூபாய் கிடைத்ததை தொடர்ந்து வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது யோசிக்க போவதாகவும், இத்தனை நாள் பட்ட துயரங்களுக்கு பதில் கிடைத்து விட்டதாகவும் தஜ்முல்ஹக் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது கோழிக்கோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.