காற்றில் உள்ள ஈரப்பதத்தை நீராக மாற்ற முடியும் என்று நிரூபித்து அதற்கான ஒரு கருவியையும் கண்டுபிடித்துள்ளது - சென்னை ஐஐடி.
காற்றை தண்ணீராக்கும் அற்புத டெக்னாலஜி! சென்னை மாணவர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு!
சென்னை ஐஐடி ஒரு தொழில்நுட்ப நிறுவனமான டெர்தாவுடன்(Teerthaa) இணைந்து வளிமண்டலக் காற்றில் இருந்து குடிக்கக்கூடிய நீரை உருவாக்கக்கூடிய ஒரு புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளது அந்த கருவிக்கு நீரோ என பெயரிடப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும். சூரிய ஒளியை கொண்டு இயங்கக்கூடிய இந்த கருவியானது குறைத்த விலையில் உருவாக்கலாம் என்று கூறியுள்ளது.
சென்னையின் ஐஐடியின் மெக்கானிக்கல் துறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த கருவியானது அளவிலும் சிறியதாக உள்ளதால் பல இடங்களுக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும். மேலும் இது சூரிய சக்த்தியில் இயங்குவதால் விலையும் குறைவு.
இந்த கண்டுபிடிப்புக்கு நாடு முழுவதும் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர். இதன் மூலம் சென்னை ஐஐடி பெரும் புகழை அடைந்துள்ளது என்றே கூறலாம்.