ஜாதியைச் சொல்லி கிண்டல்! தலையைத் துண்டித்த திடுக் சம்பவம்! நெல்லை திகில்

கட்டிட தொழிலாளி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமானது திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஒரு கட்டிட தொழிலாளி. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இவர் வசிக்கும் பகுதியையே சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 3 மாதமான குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு சுமார் 10 மணியளவில் திருநெல்வேலி ஆற்றுப்பாலத்தில் மணிகண்டன் தன் நண்பர்களான கணேசன் மற்றும் சரவணனுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் 6 மர்ம நபர்கள் விரைந்து வந்தனர். அதில் ஒருவர் மணிகண்டனின் காலில் வெட்டினார். ஒரு கால் அகன்றதால் மணிகண்டனால் ஓட இயலவில்லை. அப்போது மற்றொரு நபர் மணிகண்டனின் கழுத்தில் வெட்டியுள்ளார். சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மனிகண்டன் இறந்து போனார்.

இதனைப் பார்த்த அவருடைய மற்ற இரு நண்பர்கள் லேசான காயங்களுடன் தப்பி விட்டனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு‌ விரைந்து வந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே மணிகண்டனை கொலை செய்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்யுமாறு அவருடைய உறவினர்கள் சாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த தாக்குதலானது சாதி பிரச்சினையினால் உருவானது என்று தெரியவந்துள்ளது. இவருக்கு பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்து சிலர் இவர்களது கிராமத்தை கடக்க முயன்ற போது அவர்களின் சாதிப்பெயரை சொல்லி மணிகண்டன் கிண்டல் செய்துள்ளார். இதனால் முன்விரோதம் ஏற்பட்டு மணிகண்டன் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்  கூறி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது