கரைபுரண்ட வெள்ளம்! இடுப்பளவு தண்ணீர்! தோளில் 2 குழந்தைகள்! ஒன்றரை கி.மீ ஓடி காப்பாற்றிய போலீஸ்காரர்! நெகிழ வைக்கும் வீடியோ உள்ளே!

குஜராத் மாநிலத்தில் கொட்டும் மழையில் 2 குழந்தைகளை 1.5 கிலோமீட்டர் வரை தூக்கி சென்ற கான்ஸ்டபிளை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. கடைசியில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையின்றி தவித்து வருகின்றனர். 

கான்ஸ்டபிள் ஒருவர் 2 குழந்தைகளை ஒன்றரை கிலோமீட்டர் வரை தூக்கி சென்று மீட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலத்தின் தலைநகர் ஆமதாபாத். இப்பகுதிக்கு உட்பட்ட மோர்பி என்னும் மாவட்டத்தில் சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது.

இப்பகுதி அகமதாபாத் நகரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பிரித்திவிராஜ் சிங் ஜடேஜா என்பவர் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். திடீரென்று வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் திகைத்தனர். இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்ததை கண்ட ஜடேஜா அவர்களை தன் தோளில் சுமந்து ஒன்றரை கிலோ மீட்டர் வரை நீந்தி காப்பாற்றினார்.

 இவருடைய தைரியமான செயலை பலர் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோயானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான லக்ஷ்மன் ஜடேஜாவின் செயலை பாராட்டியுள்ளார். "அந்த வீடியோவை கண்டவுடன் மெய்சிலிர்த்தேன். அவருடைய தைரியமும் மன உறுதியும் என்னை வியக்க வைத்துள்ளது. வாழ்த்துக்கள் ஜடேஜா" என்று பாராட்டினார்.

குஜராத் மாநிலத்தின் முதலமைச்சரான விஜய் ரூபாணி மணமகிழ்ந்து கான்ஸ்டபிள் ஜடேஜாவை பாராட்டினார்." கடுமையான முயற்சி, பொது பணியில் ஆர்வம் ஆகியவற்றில் ஜடேஜா முன்னுதாரணமாக திகழ்கிறார். அவருடைய தைரியமான செயல் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது" என்று பாராட்டினார். இங்க வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.