திடீர் மயக்கம்..! தலையில் இருந்து கொட்டிய ரத்தம்..! நொடியில் பலியான காமெடி நடிகர்!

வைகைப்புயல் வடிவேலு உடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடியனாக வலம் வந்த நடிகர் ஜெயச்சந்திரன் நேற்றைய தினம் உயிரிழந்தார்.‌‌‍‌


இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா, திரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் "ஆறு" . இந்த திரைப்படத்தில் வடிவேலுடன் இணைந்து ஒரு காமெடியில் கலக்கி இருப்பார் நடிகர் ஜெயச்சந்திரன். அதாவது ஒரு காட்சியில் கழுத்தில் ரத்தத்தோடு வரும்பொழுது அவரைப் பார்த்த வடிவேலு என்னப்பா கழுத்தில் காயம் என்று கேட்கும்போது அசந்து தண்டவாளத்தில் தூங்கிவிட்டேன் .ஒரு நாலஞ்சு ரயில் கழுத்து மேலே ஏறி போச்சு என்று கூறுவார் ஜெயச்சந்திரன் .

இந்த காமெடி தமிழ் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இத்தகைய புகழ்பெற்ற காமெடியில் வடிவேலுவுடன் இணைந்து நடித்து இருந்த ஜெயச்சந்திரன் நேற்றைய தினம் மரணமடைந்த சம்பவம் திரை உலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடுமலைப்பேட்டையில் பிறந்து வளர்ந்த நடிகர் ஜெயச்சந்திரன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக சென்னைக்கு வந்தார். இவர் தமிழ் சினிமாவில் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார். 66 வயதாகும் நடிகர் ஜெயச்சந்திரன் கடந்த சில காலமாகவே சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்திருந்தார்.

இருப்பினும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர் நேற்றைய முன்தினம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தன் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார் நேற்று காலை குளியல் அறைக்கு சென்ற அவர் மயங்கி கீழே விழுந்தார். கீழே விழுந்த நடிகர் ஜெயச்சந்திரனுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நடிகர் ஜெயசந்திரனை அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் .

ஆனால் துரதிஸ்டவசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நடிகர் ஜெயச்சந்திரன் உயிரிழந்தார். நடிகர் ஜெயச்சந்திரனுக்கு லட்சுமி என்பவருடன் திருமணமாகி ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். இவருடைய இறப்பு திரைத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இவருடைய உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.