அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டும் நிறமாறும் அதிசய லிங்கம்!

ஆந்திர மாநிலத்திலுள்ள அமரராமம், க்ஷீரராமம், சோமராமம், திராக்ஷாராமம், குமாரராமம் என்ற ஐந்து தலங்களையும் பஞ்ச ராமசேத்திரங்கள் என்கின்றனர்.


இவை ராமசேத்திரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் இவை சிவாலயங்களே ஆகும். இவற்றுள் சோமராமம் என்று அழைக்கப்படுவது மேற்கு கோதாவரி பகுதியில் குனுப்புடி என்ற கிராமத்தில் உள்ளது. இங்குள்ள சோமேஸ்வரர் ஆலயம் மேற்கு சாளுக்கிய மன்னன் பீமனால் கட்டப்பட்டது.

இங்குள்ள மூலவர் லிங்கத்தை சந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது. இந்த லிங்கம் நிறம் மாறும் தன்மை கொண்டது. அமாவாசை நாளில் கோதுமை நிறத்தில் காணப்படும் இந்த லிங்கம் பின்னர் சிறிது சிறிதாக நிறம் மாறி பௌர்ணமியன்று வெண்மை நிறத்தில் காட்சி அளிக்கிறது.