ஆசையாக ஆண் நண்பன் பைக்கில் ஏறி அமர்ந்த இளம் பெண்! அடுத்த சில நிமிடங்களில் அரங்கேறிய பகீர் சம்பவம்! கதறும் பெற்றோர்!

கல்லூரி நண்பருடன் பெண்ணொருவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பேருந்து மோதி உயிரிழந்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செங்குன்றம் பகுதிக்கருகே காந்தி நகர் எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதிகுட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் தெருவில்  உமாமகேஸ்வரி என்ற 19 வயது இளம்பெண் வசித்து வந்தார். வியாசர்பாடியில் உள்ள சட்டக்கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இவருக்கு கல்லூரியில் பார்த்திபன் என்ற இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கவரப்பேட்டை பகுதிக்கருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்தில் மோதியுள்ளனர். இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உமா மகேஸ்வரியையும், பார்த்திபனையும் சாலையோரத்தில் இருந்த பொதுமக்கள் மீட்டு அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் உமாமகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பார்த்திபனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.