தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை! கதவை உடைத்த ஆண் நண்பர்கள்! பெண் தோழியின் அதிர வைத்த செயல்!

கல்லூரி மாணவி தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது புவனேஷ்வரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஷ்வர். புவனேஷ்ருக்கு உட்பட்ட நியூயாசாஹி பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பிரக்யான் பிரியதர்ஷினி சாஹு என்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண் படித்து வருகிறார். இப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி தேர்விற்காக படித்து வந்துள்ளார்.

நேற்று மாலை பிரியதர்ஷினி தன் விடுதி அறைக்கு வந்துள்ளார். நெடுநேரமாகியும் பிரியதர்ஷினி வெளிவராததால் விடுதி மேலாளர் பிரியதர்ஷினியின் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். 

அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது பிரியதர்ஷினி தன்னுடைய துப்பட்டாவை கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துவிட்டார். அவர் தூக்கில் தொங்கியிருப்பதை கண்ட அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட விடுதிக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்துகொண்ட பிரியதர்ஷினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது புவனேஷ்வரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.