கேப்டனை வீடு தேடிச் சென்று சந்தித்த எடப்பாடி! பரபரப்பு பின்னணி!

கேப்டன் - எடப்பாடி சந்திப்பு


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினார்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முதல்வரோடு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, டாக்டர்.விஜயபாஸ்கர்,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் உடனிருந்தனர்..

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தேமுதிக தரப்பில் பிரேமலதா, சுதிஷ் ஆகியோர் உடனிருந்தனர்...

அதிமுக கூட்டணியின் தொகுதி பட்டியல் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொகுதி ஒதுக்கீடு பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.