நயன்தாரா – கீர்த்தி சுரேஷ்! ஒரே நேரத்தில் 2 பேருடனும் ரஜினி செய்யப்போகும் ரொமான்ஸ்!

முன்னணி நடிகைகள் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம் என்று சொல்கிறார்கள். அந்த வகையில் இரண்டு ஹீரோயின்கள் தேவை என்பதால் முருகதாஸ் தீவிர தேடுதல் வேட்டையில் இரண்டு பேரை பைனல் செய்துள்ளதா சொல்லப்படுகிறது.

அதன் படி ரஜினியுடம் நயன்தாரா நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. சந்திரமுகி படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் ரஜினிக்கு நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளார்.

இதே போல் கீர்த்தி சுரேஷ் விஜய், விக்ரம், சூர்யாவை தொடர்ந்து ரஜினியுடன் ஜோடி போட உள்ளார்.