சிறுமியிடம் சர்ச் ஃபாதர் செய்யும் செயலா இது? நெல்லை பகீர்!

திருநெல்வேலி அருகே இளம்பெண்ணை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் செல்வராஜ் என்ற 52 வயது மதபோதகர் வசித்து வருகிறார். வள்ளியூரில் கடந்த 20 ஆண்டுகளாக ஜெபக்கூட்டங்களை இவர் அரங்கேற்றி வருகிறார். 

இவர் நடத்தும் ஜெபக் கூட்டத்திற்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வழக்கமாக வந்து கொண்டிருந்தனர். அத்தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரிடம் கடந்த சில மாதங்களாகவே செல்வராஜ் தவறான முறையில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதனை அந்த சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அவர் தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இம்முறை ஆத்திரமடைந்த சிறுமுகை நிகழ்ந்தவற்றை தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமை கூறுவதைக் கேட்ட பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக வள்ளியூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ஒருவழியாக செல்வராஜை தேடி கண்டுபிடித்த பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவமானது திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.