சாண்டியின் வீட்டுக்குப் போன சித்தப்பு! நெட்டிசன்களை மகிழவைக்கும் புகைப்படம்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள சரவணன் குடும்பத்தினருடன் சாண்டியின் வீட்டிற்கு சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது‌.


பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் நடிகர் சரவணன் கலந்து கொண்டார். அனைவரிடமும் நற்பெயரை வாங்கி கொண்டிருந்தார். எதிர்பாராவிதமாக கல்லூரி காலங்களில் தான் பேருந்துகளில் பெண்களை உரசுவதற்காக பயணித்ததாக கூறினார்.

இதற்கு பொதுவெளியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து வேறு வழியின்றி சரவணனை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்காக சரியான காரணமாக வெளியிடப்படவில்லை. அவர் வெளியேற்றப்பட்ட செய்தியை அறிந்ததும் பிக்பாஸ் வீட்டில் உறுப்பினர்கள் அழுது புலம்பினர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை சரவணன் கவின் மற்றும் சாண்டியிடம் நெருங்கி பழகி வந்தார். இருவருக்கும் பல நல்ல அறிவுரைகளை கூறியுள்ளார். வெளியேற்றப்பட்ட பிறகு சரவணன் ஊடகங்களை தவிர்த்து வருகிறார்.

தற்போது அவருக்கு தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் சென்னைக்கு வந்தார். அப்போது தன்  குடும்பத்தினருடன்  சாண்டியின் வீட்டிற்கு சரவணன் சென்றிருந்தார். சாண்டியின் மகளான லாலாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். 

பிக்பாஸ் வீட்டை தாண்டியும் தங்களது நட்பு தொடரும் என்று உணர்த்தும் வகையில் சரவணனின் செயல்கள் இருந்தன. இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.