பொள்ளாச்சி பெண்கள் சித்ரவதை வீடியோ! நியாயம் கேட்டு முதல் ஆளாக களம் இறங்கிய தில் சின்மயி!

பொள்ளாச்சி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு ஆபாச படம் எடுத்த விவகாரத்தை கையில் எடுத்து சின்மயி செய்துள்ள செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் பெரிய அளவில் செய்திகள் வெளியிடவில்லை. குற்றவாளிகளின் அரசியல் தொடர்பு காரணமாக இந்த விவகாரத்தில் தலையிட பலரும் அஞ்சி வருகின்றனர்.

மேலும் சுமார் 60 பெண்கள் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தேசிய ஊடகங்கள் எதுவும் பொள்ளாச்சி விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் சின்மயி இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.

இவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டும் யாரும் இதை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் அரசியல் தொடர்பு தான் என்று தில்லாக சின்மயி கூறியுள்ளார். மேலும் தேசிய ஊடகங்களின் கவனத்தை பெற அனைவரும் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க நீதி விசாரணை வேண்டும் என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வேறு சில பிரபலங்களையும் சின்மயி அவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் பொள்ளாச்சி விவகாரத்தை தேசிய பிரச்சனையாக கொண்டு செல்ல முடியும் என்று சின்மயி தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.