சீனாவில் புதிதாக உருவான ஜி4 வைரஸ்..! உலகம் முழுவதும் பரவும் என பகீர் எச்சரிக்கை!

கொரோனவைரஸை தொடர்ந்து சீனாவில் தற்போது மீண்டும் ஜி4 என்ற வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.


சீனாவின் ஹூனான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவலை வெளியிட்டு மக்களை எச்சரித்துள்ளனர். சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக் காய்ச்சலைக் கண்டுபிடித்துள்ளனர், இது ஒரு தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்டது என்று அமெரிக்க அறிவியல் இதழான பி.என்.ஏ.எஸ் இல் திங்களன்று வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

ஜி 4 என்று பெயரிடப்பட்ட இது 2009 ஆம் ஆண்டில் ஒரு தொற்றுநோயை ஏற்படுத்திய எச் 1 என் 1 வைரஸிலிருந்து மரபணு ரீதியாக வந்துள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய சோதனையின் முடிவில் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸில் மனிதர்களைப் தாக்கக்கூடிய அனைத்து மூலக்கூறுகளும் ஏற்றதாக அமைந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். 2011 முதல் 2018 வரை, ஆராய்ச்சியாளர்கள் 10 சீன மாகாணங்களில் உள்ள இறைச்சிக் கூடங்களிலும், கால்நடை மருத்துவமனையிலும் பன்றிகளிடமிருந்து 30,000 நாசி துணிகளை எடுத்து, 179 பன்றிகளிடம் வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த ஜி4 வைரஸ் மனிதர்களிடையே பெரும் தொற்று நோயை ஏற்படுத்தக்கூடிய வல்லமை பெற்றுள்ளதாகவும், ஏற்கனவே இந்த வைரசால் 10.4% பன்றித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த வைரஸ் ஆனது ஏற்கனவே விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவி விட்டது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. ஜி 4 வைரஸின் மனித தொற்று மனித தழுவலை மேலும் அதிகரிக்கும் மற்றும் மனித தொற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது கவலைக்குரியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். விலங்கிலிருந்து மனிதனுக்குள் குதித்த ஒரு நோய்க்கிருமியால் இந்த ஜூனோடிக் தொற்று ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.