சிறுவன் வயிற்றுக்குள் இரும்புச்செயின்? வியப்பில் ஆழ்ந்த மருத்துவர்கள்

வயிற்று வலியால் துடித்த சிறுவனின் வயிற்றில் இரும்பு கம்பிகள் இருந்தததை கண்டு சீனாவில் மருத்துவர்கள் அதிர்ச்சியுற்றனர்.


சீனாவின் வசித்து வரும் சிறுவன் ஒருவன் கடந்த சில நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தான். சிறுவனின் வயது ‌6. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்களால் முதலில் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் சிறுவனின் வயிற்று பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது சிறுவனின் வயிற்று பகுதியில் செயின் போன்ற பொருள் இருந்துள்ளது. சிறுவனின் குடல் பகுதியில் அந்த பொருள் சிக்கிக்கொண்டு பேராபத்தை ஏற்படுத்தி விடும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து அதனை வெளியே எடுக்க முடிவு எடுத்தனர். அறுவை சிகிச்சை செய்த போது, அந்த பொருள் செயின் இல்லை என்பதும், 64 காந்த மணிகளால் உருவாக்கப்பட்ட விளையாட்டு செயின் என்பதையும் கண்டறிந்த மருத்துவர்கள் அதனை வெளியே எடுத்தனர்.

தற்போது அந்த சிறுவன் நல்ல நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கூறுகையில், "சிறுவனின் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தபோது ஏதோ செயின் இருப்பது போன்று தெரிந்தது. பின்னர் அந்த சிறுவனிடம் எந்த பொருளையாவது விழுங்கினாயா என்று கேட்டதற்கு ஆம் என்று ஒப்புக்கொண்டான். அது வயிற்று பகுதியில் இருந்தால் உடலுக்கு பேராபத்து ஏற்பட்டு விடும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து காந்த செயினை வெளியே எடுத்தோம். தற்போது அந்த சிறுவன் நல்ல நிலையில் உள்ளான்" என்று கூறினார்.

இந்த சம்பவமானது சீனா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.