சின்னஞ்சிறு குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் செய்த உதவியை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
குழந்தையின் வயிறு வழியாக வெளியேறிய மலம்..! பதறிய பெற்றோர்..! ஆனால் அடுத்த நிமிடம் அரங்கேறிய அதிசயம்!
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு மாரி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 28. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திவ்யாவின் வயது 22.
சென்ற ஆண்டு திவ்யா கருவுற்ற நிலையில் டிசம்பர் மாதத்தில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றுள்ளது. பிரசவத்தில் திவ்யாவிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ஒரு குழந்தை அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே இறந்துவிட்டது. மிகுந்த சோகத்துடன் மற்றொரு குழந்தையை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
ஆனால் வீட்டிற்கு வந்த சில நாட்களில் அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. காப்பாற்றப்பட்ட குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து மலம் வெளியேற தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்த போதிலும் குழந்தையின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மேலும் 2 லட்சம் தேவைப்படும் என்று மருத்துவர்கள் மாரியிடம் கூறியுள்ளனர். கூலித்தொழிலாளியான தம்மால் இவ்வளவு பணத்தை குரட்டை இயலாது என்பதை புரிந்துகொண்ட மாறி குழந்தையை வீட்டிற்கு அழைத்துவந்தார்.
பின்னர் அவருடைய நிலைமை சமூக வலைத்தளங்களின் மூலம் அம்மாவட்ட ஆட்சியரான ஜெயகாந்தனுக்கு தெரியவந்தது. உடனடியாக அவரை சந்தித்து குழந்தையை மதுரை தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்துள்ளார். தற்போது அவருடைய அறிவுரையின்படி குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.
தன் வாழ்நாளில் இந்த உதவியை நிச்சயம் மறக்க மாட்டேன் என்று மாரி ஆட்சியரிடம் கண்கலங்கிய சம்பவம் அங்கு இருந்தவர்களை உருக வைத்தது.மாவட்ட ஆட்சியர் செய்த உதவியை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.