2 கைகள், 2 கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தை..! அதிர்ச்சியில் தாய்..! இதற்கு டாக்டர்கள் சொல்லும் காரணம்!

அசாதாரணமான மரபணு கோளாறால் ஒரு குழந்தை 2 கைகள் மற்றும் 2 கால்கள் இல்லாமல் பிறந்துள்ள சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தில் விதாஷா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட சக்லா என்ற கிராமத்தில் வசித்து வந்த 28 வயது தாய் ஒருவர் சமீபத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் பிரசவம் முடிந்த பின்னர் அழகான ஒரு பெண் குழந்தையை வெளியே எடுத்தனர்.

ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அந்த குழந்தை பிறக்கும் போதே 2 கைகள் மற்றும் 2 கால்கள் இல்லாமல் பிறந்தது. ஏதேனும் மரபணு கோளாறுகளால் இத்தகைய குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிறவு கோளாறுடன் என் பிறந்த இந்த குழந்தையானது "டெட்ரா அமேலியா" என்ற நோயுடன் பிறந்துள்ளது. இந்த நோயானது கை கால்கள் இல்லாமல் இருப்பதை வகைப்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர் ஒருவர் கூறுகையில், "குழந்தை நல்ல உடல்நிலையுடன் இருக்கின்றது. ஆனால் உடலின் உள்ளுறுப்புகள் சரியாக மேம்படுகின்றனவா என்பதை சோதிப்பதற்கு பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

இந்த நோயானது மரபணுவில் உள்ள பிறழ்வுகளால் ஏற்படும் கோளாறு என்றும், புதிதாக பிறக்கும் குழந்தைகளில் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவமானது அக்கிராமத்தில் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.