முதல்வர் எடப்பாடி சாத்தனூர் அணையைத் திறக்க உத்தரவு! எடப்பாடியின் நல்லாட்சியில் மழையும் பொழிகிறது, அணைகளும் வழிகிறது.

ஜெயலலிதா ஆட்சி புரிந்தால் நாடெங்கும் நல்ல மழை பொழியும் என்பார்கள். அப்படியே எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி காலத்திலும் மழை பொழிவு நீடிப்பதால், அணைகளில் நீர் நிரம்பியுள்ளது.எனவே குறித்த காலத்தில் அணைகள் திறக்கப்படுகிறது.


இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள குறிப்பு இதோ. திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைத்துள்ளன. 

இக்கோரிக்கையினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 9.9.2020 முதல் 6 தினங்களுக்கு 264.38 மி.க. அடி நீரினை குடிநீர் தேவைகளுக்காக சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் எல்லீஸ் அணைக்கட்டு வரை தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். 

இதனால், விழுப்புரம் மாவட்டம் குடிநீர் வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.