காவல் துறையினருக்கு கரிசனம் காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: குன்றத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாண்டிமுனி, மயிலாப்பூர் காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்த அருண்காந்தி, புனித தோமையர்மலை ஆயுதப்படை பிரிவில் பெண் காவலராக பணிபுரிந்து வந்த சத்தியலட்சுமி, எஸ்-2 விமான நிலைய காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ரவி,

நுண்ணறிவு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ரமேஷ் பாபு, சென்னை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2ம் அணியில் பெண் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த துர்கா, சென்னை-ஆவடி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மையத்தின் வாத்தியக்குழு பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்த அருள்தாஸ் போன்றவர்கள்.

சென்னை தலைமை செயலக சுற்றுக்காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பிரதீஷ், சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்த ராம்கி, சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த தேவராஜ், ஆயுதப்படை முதலாம் அணியில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த பவித்ரா, சென்னை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2ம் அணியில் காவலராக பணிபுரிந்து வந்த இளங்கோவன், 3ம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த மருதுபாண்டி,

13ம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த தானேஷ் ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மிகுந்த வேதனை அடைந்தேன். உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறையினருக்கு துன்பம் வருகையில், உடனுக்குடன் ஆறுதல் நடவடிக்கை எடுப்பதில் முதல்வரின் வேகம் சிறப்பானது என்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள்.