அடேங்கப்பா... ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை திறந்துவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

கல்லூரியை முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றி இருக்கிறார். கல்லூரியை முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றி இருக்கிறார்.


தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,900 கோடி செலவில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி பூங்கா மற்றும் கல்லூரியில் மொத்தம் 3 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் கால்நடைப்‌ பண்ணை வளாகத்தில்‌, நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

2ம்‌ பிரிவில்‌, பால்‌, இறைச்சி, மீன்‌ மற்றும்‌ முட்டை உள்ளிட்டவை பதப்படுத்தும் கூடமும், அவற்றில்‌ இருந்து மதிப்பு கூட்டிய பொருட்களை தயார்‌ செய்யவும்‌, சந்தைப்படுத்தவும்‌ வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழக கால்நடை அறிவியல் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள வசதியாகவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் 3வது பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர மரபு திறன்‌ மிக்க நாட்டின மற்றும்‌ கலப்பின காளைகளின்‌ புதிய உறைவிந்து உற்பத்தி நிலையமும்‌ இதே வளாகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 1900 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும்‌ தமிழகத்தின்‌ 5ஆவது கால்நடை மருத்துவக்‌ கல்லூரியையும்‌ அவர்‌ தொடங்கி வைத்துப் பேசினார். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 87 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு உறுப்பினருகும் ஆளுக்கு 10 ஓட்டு கொண்டுவாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.