முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் செய்துவருகிறார்..! எப்போதும் அவர் விவசாயிதான்.!

விவசாயியாக இருக்கும் காரணத்தாலே, விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் செய்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் இன்று தலைமை செயலகத்தில் கானொளிக் காட்சி மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார்.


மேலும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் மதுரை மாவட்டம், மதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 5 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்புக் கிடங்கினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

மேலும், 47 கோடியே 36 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை வழங்கிடும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையால் கொள்முதல் செய்யப்பட்ட 23 டிராக்டர்கள் மற்றும் 17 மண் அள்ளும் இயந்திர வாகனங்களையும் வழங்கினார்கள்.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், வேளாண் உற்பத்தி திறனில் உள்ள இடைவெளியை உரிய பண்ணை அணுகுமுறை மூலம் குறைத்து உணவுப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், வேளாண் விளைபொருட்களின் அறுவடைக்குப்பிந்தைய பதப்படுத்தும் கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், சந்தையிணைப்பை வேறுபடுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து அவர்களின் வருமானத்தைப் பலமடங்காக உயர்த்திடவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

 மேலும், விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 4 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களுடன் கூடிய சேமிப்புக் கிடங்கு; நாமக்கல் மாவட்டம் - பரமத்தி வேலூர், விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனம் மற்றும் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் - கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் மாவட்டம் - ஆனைமலை, திருப்பூர் மாவட்டம் - வெள்ளக்கோயில் ஆகிய இடங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 16 கோடியே 74 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இயந்திரங்களுடன் கூடிய தரம்பிரிப்பு, மதிப்பீட்டு கூடங்கள், மின்னணு ஏலக்கூடங்கள் மற்றும் எடைமேடைகள்;

மின்னணு தேசிய வேளாண்மை சந்தை திட்டத்தின் கீழ், விவசாயிகளின் சந்தை திறனை ஊக்குவிக்கும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள், ஏலக்கூடம் மற்றும் விவசாயிகள் ஓய்வு அறை; திருப்பூர் மாவட்டம் -

உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, ஏலக்கூடம் மற்றும் உலர்களம்; திண்டுக்கல் மாவட்டம் - திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, ஏலக்கூடம் மற்றும் உலர்களம்; வேலூர் மாவட்டம் -

அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1 கோடியே 73 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இயந்திரங்களுடன் கூடிய ஏலக்கூடம் மற்றும் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரம்பிரிப்பு மற்றும் மதிப்பீட்டு கூடம், மின்னணு ஏலக்கூடம்; தேனி மாவட்டம் - கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்னணு ஏலக்கூடம் மற்றும் விவசாயிகள் ஓய்வு அறை போன்றவற்றை திறந்துவைத்தார்.