திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி TNPL கோப்பையை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி!

TNPL தொடரின் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி ,கோப்பையை கைப்பற்றியுள்ளது .


டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 126 ரன்களை எடுத்தது . அந்த அணியின் சசிதேவ் அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்தார் . 

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி , தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் . அந்த அணியின் சுமந்த் ஜெயின் மட்டும் அதிகபட்சமாக 45 ரன்களை எடுத்தார் . இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது .இதனால் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி ,கோப்பையை கைப்பற்றியுள்ளது .

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் பெரியசாமி  சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் பெரியசாமிக்கு வழங்கப்பட்டது.