கேட்பாரற்று நிற்கும் பைக், ஸ்கூட்டர்! மிக குறைந்த விலையில் ஏலம் விடும் போலீஸ் ! எங்க தெரியுமா?

சென்னையில் சாலையோரம் கைவிடப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ள சென்னை மாநகராட்சி அவற்றை ஏலம் விட முடிவு செய்துள்ளது.


சென்னையில் சாலை ஓரமும் நடைபாதைகளிலும் ஏகப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதை நாம் அன்றாடம் பார்க்க முடியும். அது போன்ற வாகனங்கள் அன்றாடம் நின்று கொண்டிருப்பதையும் நாம் கவனித்திருக்கலாம். அந்த வாகனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில் அவற்றை சென்னை போக்குவரத்து போலீசும் மாநகராட்சியும் இணைந்து பறிமுதல் செய்து விற்கும் நடவடிக்கையை பல ஆண்டு காலமாக செய்து வருகின்றன.

அதன்படி தற்போதும் 2480 வாகனங்களை மாநகராட்சி பறிமுதல் செய்துள்ளது. அதில் 2400 வாகனங்கள் இருசக்கர வாகனங்கள். அவற்றை தற்போது ஏலத்திற்கு விடுவதற்கான பழைய பொருட்கள் வர்த்தக கழகம் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதேவேளையில் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து போலீஸ் ஆர்வம் காட்டுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீண்ட காலம் ஒரே இடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நின்றாலும் பொதுமக்களின் புகாரை அடுத்து தான் அவை பறிமுதல் செய்யப் படுவதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.

நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து விற்கும் பட்சத்தில் கூடுதல் லாபம் ஈட்டலாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலத்தில் விட்ட சென்னை மாநகராட்சி 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பணத்தை ஈட்டியது. இதேபோல் நான்கு சக்கர வாகனங்களின் பதிவு செய்தால் இன்னும் பணம் அதிகமாக கிடைக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே இதற்கு போக்குவரத்து போலீஸ் ஒத்துழைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.