மொட்டை மாடி..! ஆபாச படம்..! 13 வயது சிறுமியுடன் 68 வயது கிழட்டு அதிமுக பிரமுகர்..! ச்சீய் கன்றாவி!

சென்னையில் சிறுமிக்கு ஆபாச படங்களை காண்பித்து துன்புறுத்தி வந்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


சென்னை வண்ணாரப்பேட்டையில் 68 வயதான ரவி என்பவர் அதிமுக பிரமுகராக உள்ளார். இவர் பக்கத்து வீட்டில் இருக்கும் 13 வயது சிறுமியை மாடிக்கு அழைத்து சென்று தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்துள்ளார். அதை காண்பித்து பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியை மீட்டு அவரிடம் விசாரித்த போது, கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து இது போன்று துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார் ரவி.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் ரவி வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். ரவியை போக்சோ சட்டத்தில் கைது செய்து உள்ளதாக காவல் துறையினர் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சிறார் ஆபாச படங்களை வைத்திருந்தாலே 10 ஆண்டு வரை சிறை என கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை செய்திருந்த நிலையில், சிறார் ஆபாச படத்தை காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.