50 பெண்கள் கற்பழிப்பு! வீடியோ எடுத்து மிரட்டல்! சிக்கிய சாஃப்ட்வேர் என்ஜினியர்!

சுமார் 50 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த பெங்களூர் சாஃப்ட்வேர் என்ஜினியரை கைது செய்த போலீசார் கையை உடைத்துள்ளனர்.


சென்னை அம்பத்தூர் பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்துப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் இளைஞர் ஒருவன் அதிவேகமாக வந்துள்ளான். அவனை நிறுத்திய போது தப்பிச் செல்ல முயன்றுள்ளான். விரைந்து செயல்பட்ட போலீசார் அவனை பிடித்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் போது அந்த இளைஞன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளான்.

   இரவு நேரத்தில் அம்பத்தூர் பகுதியில் என்ன வேலை என்கிற கேள்விக்கு அவனிடம் சரியான பதில் இல்லை. இதனை தொடர்ந்து போலீசார் அவனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற பிறகும் அவன் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை. இதனை அடுத்து அவன் வைத்திருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். செல்போனை ஆய்வு செய்த போது போலீசாரே திடுக்கிட்டு போயினர்.

   அந்த இளைஞரின் செல்போனின் வீடியோ போல்டரில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. அத்தனை வீடியோக்களுமே பெண்கள் கற்பழிக்கப்படும் வீடியோக்களாக இருந்தன. இதனால் வீடியோவை போலீசார் நன்றாக ஆராய்ந்த போது அந்த வீடியோவில் பெண்களை கற்பழித்தவன் போலீசாரிடம் சிக்கிய நபர் என்று தெரியவந்தது. இதனை அடுத்து உஷார் ஆன போலீசார் அவனிடம் விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தனர்.

   அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மாத்தூரை சேர்ந்த அவனின் பெயர் அறிவழகன் என்பது தெரியவந்தது. படித்து முடித்து பெங்களூரில் சாப்ட்வேர் கம்பேனியில் வேலை பார்த்து வந்த அறிவழகன் ஒழுங்கின நடவடிக்கை காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளான். இதன் பிறகு சென்னை திரும்பிய அறிவழகன் புறநகர் பகுதிகளில் வீடுகளில் தனியாக உள்ள பெண்களை நோட்டமிட்டுள்ளான்.

   சிலரிடம் இயல்பாக பழகி அவர்களை ஏமாற்றி பலாத்காரம் செய்த அறிவழகன் பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோவாக பதிவு செய்து அவ்வப்போது மிரட்டியும் தனது ஆசைகளை தீர்த்து வந்துள்ளான். ஒரு கட்டத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அறிந்து வீடுகளுக்குள் திடீரென புகுந்து பெண்களை தாக்கி நிலைகுலையச் செய்து பலாத்காரம் செய்து, அதனையும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளான்.

   மேலும் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களிடம் இருந்து அவ்வப்போது மிரட்டி பணமும் பறித்துள்ளான் அறிவழகன். அறிவழகனிடம் இப்படி சிக்கிய பெண்கள் அனைவருமே குறைந்த படிப்பறிவு மற்றும் அதிக வெளி உலக தொடர்பு இல்லாதவர்களாக இருந்துள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்டு அந்த பெண்களை அறிவழகன் தொடர்ந்து நாசப்படுத்தி வந்துள்ளான். இதற்கிடைய சில மாதங்களுக்கு முன்னர் பெண் ஒருவர், அறிவழகன் மீது துணிந்து புகார் அளித்தார். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அறிவழகன் ஜாமீனில் வெளியே வந்து அம்பத்தூர் பகுதியில் கைவரிசை காட்டிய போது சிக்கினார்.

   இந்த நிலையில் அறிவழகனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. ஆனால் அவன் செல்போனை ஆய்வு செய்த போது சுமார் 50 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள வீடியோ இருந்தது. இதனால் போலீசாரே அறிவழகனுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட போது தப்பி ஓட முயற்சித்த அறிவழகன் கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் அவன் கை எப்படி உடைந்திருக்கும் என்று நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.