பெட்ரோல் பங்கில் ஒவ்வொறு முறையும் நாம் ஏமாற்றப்படுவது இப்படித்தான்..!

அன்றாட நாட்களில் பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் பெரிய அளவில் ஏமாறுகின்றனர் என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைக்கிறது.


இந்தியாவில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் நூதன முறையில் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். மக்களை திசைதிருப்பி இதுபோன்ற செயல்களில் சிலர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு முறை பெட்ரோல் நிரப்பப்படும் போது சின்னஞ்சிறு தொகையில் ஏமாற்றப்படுகிறோம். ஆனால் ஓராண்டிற்கு கணக்கெடுத்து பார்த்தால் பல ஆயிரக்கணக்கில் நாம் ஏமாற்றப்படுகிறோம் என்ற செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம், "பெட்ரோல் பங்கில் காருக்கு 500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப செல்கிறோம். ஊழியர் 300 ரூபாய்க்கு நிரப்பிவிட்டு முடித்து விடுவார். நான் கேட்டது 500 ரூபாய் என்று கூறியவுடன் நம்மை சற்று திசை திருப்புவார். அந்த சமயத்தில் மீட்டரில் 0-வுக்கு மாற்றாமல் 300-ல் இருந்தே நிரப்புவார். இதனால் குறைந்த அளவிற்கு பெட்ரோல் நிரப்பப்படுகிறது.  

இந்த முறையில் கிட்டத்தட்ட பல ஆயிரம் ரூபாய் ஒரு நாளில் ஏமாற்றப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இந்த செய்தியானது பகிரப்பட்டுள்ளது.

இனியாவது பெட்ரோல் பங்குகளில் உன்னிப்பாக கவனிப்பதன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறியட்டும்.