அடப்பாவிகளா? சாமி சிலைக்கு செருப்பு மாலை! கொந்தளிக்கும் கிராம மக்கள்! தர்மபுரி பதற்றம்!

சாமி சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை மாட்டியுள்ள சம்பவமானது தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில் பெண்ணாகரம் எனும் இடம் அமைந்துள்ளது. கூத்தப்பாடி கிராமம் பெண்ணாகரத்திற்கு உட்பட்டது. இந்த கிராமத்தில் முனியப்பன் சுவாமி என்னும் கோவில் உள்ளது.  கூத்தப்பாடியின் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் முனியப்பன் சுவாமியை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறுவிதமான வழிபாட்டுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வருடந்தோறும் கோவிலை சுற்றி வாழும் பொதுமக்கள் 2 ஆயிரம் களி உருண்டைகளை இறைவனுக்கு படைப்பதற்காக செய்வர். செய்த பின்னர் இறைவனுக்கு படைத்து பொதுமக்கள் வழிபடுவர்.

இந்த வருடத்தில் இன்று அந்த விழாவை எடுக்க திட்டமிட்டிருந்தனர். அனைவரும் கோவிலுக்கு சென்றனர். அப்போது எதிர்பாராவிதமாக சாமி சிலையில் செருப்பு மாலை போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சாமி சிலையின் முகத்தில் நாமமும் பட்டையும் போடப்பட்டிருந்தது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரை விசாரித்து மர்ம நபர்களை கைது செய்யும் வரை சாலை மறியலில் ஈடுபட போவதாக பொதுமக்கள் அறிவித்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.