திருமணமாகி 2 குழந்தை உள்ள பெண்ணுடன் தேவாலயத்திற்குள் வைத்து பாதிரியார் உடலுறவு! வைரலாகும் செல்போன் வீடியோ! எங்கு தெரியுமா?

கேரளாவில் பாதிரியார் ஒருவர் பெண்ணிடம் உடலுறவு கொண்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது‌.


கேரளா மாநிலத்தில் கட்டப்பனா என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட வெள்ளையன்குடி என்ற இடத்தில் கத்தோலிக்க தேவாலயம் இயங்கி வருகிறது. பேராயர் ஜேம்ஸ் என்பவர் இங்கு பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய செல்போனை பழுது பார்ப்பதற்காக சர்வீஸ் கடை ஒன்றிற்கு கொடுத்துள்ளார். 

அவருடைய செல்போனிலிருந்து பலான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களில் பேராயர் வேறு ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது போன்று அமைந்துள்ளது. இந்த வீடியோ மார்ச் மாதத்தில் வைரலானது. வீடியோ வெளியான உடனே பேராயர் பாதிரியார் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். 

பின்னர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண் குறித்து விசாரணை நடத்தினர். அந்தப் பெண் ஊரடங்கு காலத்தில் தேவாலயத்திற்கு அடிக்கடி வந்து போனார் என்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் பேராயர் உடலுறவு கொண்டிருக்கலாம் என்ற நோக்கில் காவல்துறையினர் இன்னும் வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர் என்று கூறப்படுகிறது. தான் அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் போது பேராயர் வீடியோ எடுத்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.

சம்பந்தப்பட்ட பெண் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அந்த தேவாலயத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், "பேராயர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை நினைத்து கூட பார்க்க இயலவில்லை. அவர்களை கிருத்துவர்கள் தெய்வத்திற்கு சமமாக போற்றுவர். அத்தகைய பெருமையான நிலையை உடைய பேராயர்கள் இது போன்ற கீழ்த்தரமான சம்பவங்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. அவர் உடனடியாக பேராயர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார் என்பது மட்டுமின்றி அவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார். 

கேரளாவில் பேராயர்கள் தொடர்ந்து இதுபோன்ற இழிவான சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.