அ.தி.மு.க.வில் சாதி உரசல்! மீண்டும் சசி! அமித்ஷா ஆட்டம் ஆரம்பம்!

ஒபிஎஸ்ஸின் ஒற்றை மகன் பார்லிமி மெண்ட்டில் களமாட தொடங்கியதிலிருந்தே கட்சி மீண்டும் கண்டமாகும் காட்சிகள் ஆரம்பித்து விட்டன.


இந்த முறை கட்சியை முடித்து வைக்க களமிறங்கி இருப்பது அமைச்சர் தங்கமணி.அதானி நிற்வனத்துக்கு நெருக்கமான ஈரோட்டைச் சேர்ந்த  திருவேணி என்கிற சுரங்க நிறுவனத்தின் அறிவிக்கப் படாத பிராண்ட் அம்பாசிடர் ஆகிவிட்டார் தங்கமணி.தினகரனுடன் எடப்பாடி மோதிய போது அவருக்கு இடமும் வலமுமாக நின்றவர்கள் தங்கமணியும் , வேலுமணியும்.கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இந்த மணிகள் எப்போதும் எடப்பாடிக்கு ஆதரவாகவே ஒலித்தன.

இந்த மணியோசை கேட்டுத்தான் அமித்ஷா ஒபிஎஸ் ,இபிஎஸ் இனைப்பை உருவாக்கி தமிழகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கணவு கண்டார்.இடைத்தேர்தல் முடிவுகளும்,பாராளுமன்ற இழப்புகளும் அவர் கண்ணைத் திறக்க இப்போது ஷா,சசியை புதிய கெட்-அப்பில் களமிறக்க காய் நகர்த்த துவங்கியிருக்கிறார்.அதானியின் தோழமை நிறுவனமான திரிவேனிக்கு தமிழகத் துறைமுகங்களை கைமாற்ற களமிறங்கிய தங்கமணி தனக்கு இன்னும் கொஞ்சம் பவர் தேவை என்று தெரிந்து கொண்டார்.

டெல்லி தன்னை' மூன்றாவது ' மனிதனாக நட்டத்துவதால் ,இரண்டாவது இடத்தைப் பிடிக்க அவர் எடுத்த முடிவு துணை முதல்வராவது.அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளும் மத்திய பெண் அமைச்சர். அவர்களது சந்திப்பு ஒபிஎஸ்ஸின் உச்சந்தலையை சூடாக்க அவர் டெல்லிக்கு போய் அமித் ஷாவை சந்தித்தார்.என்ன செய்ய ஒருகாலத்தில் அவர் பக்கம் நின்ற பாண்டியராஜன் , செம்மலை எல்லாம் பதவி கிடைத்ததும் பதுங்கிவிட்டதால் ஒபிஎஸ் இப்போது அச்சத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில்,இதுவரை எடப்பாடி அணியில் இருந்த செல்லூர் ராஜு,ஆர்.பி உதயகுமார்,ஜக்கையன் போன்ற சிலர் இப்போது ஒபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வெளிப்படையாக களமிறங்கி இருக்கிறார்கள்.எடப்பாடி,ஒபிஎஸ் என்பது போய் கொங்கு மண்டலமா,மதுரை மண்டலமா என சாதி பிரிவினை தலை தூக்கி இருக்கிறது.அமித் ஷாவின் சசிகலா 2.O திட்டமும் திரிசங்கு நிலையில் இருக்கிறது. இப்படி,சாதியா,சசியா,ஷாவா என அவர்கள் கட்சிகட்ட திமுக ரத்த வாடையை மோப்பம் பிடித்தபடி, எச்சில் ஊற இருட்டில் பதுங்கியபடி பார்த்துக்கொண்டு இருக்கிறது.