காரில் தரதரவென 500மீ இழுத்துச் செல்லப்பட்ட இளம் பெண்! பிறகு நேர்ந்த கொடூரம்!

தமிழகத்தில் பெண்களின் நடமாட்டம் பாதுகாப்பற்றதாக மாறி வரும் சூழல் அதிகரித்துள்ளது.  காரில் செல்லும் சில மர்ம ஆசாமிகள் நடந்து போகின்ற சில பெண்களை கடத்த முயலும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.


நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடி என்னும் இடம் அமைந்துள்ளது. இதன் அருகில் கேசவன்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் என்பவர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். பெரிய மகளான கலையரசி தனது தங்கை மற்றும் தோழியருடன் பணியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். 

கடந்த 6-ந் தேதி இரவு இவர்கள் அனைவரும் ஒன்றாக நடந்து சென்றனர். அப்போது ஒரு கார் சீறிக்கொண்டு வந்தது. இவர்கள் அருகே வந்தபோது கதவை திறந்து கலையரசியை கடத்த முயன்றனர்.அவர்களுடைய பிடியில் இருந்து கவியரசி தப்பிக்க முயன்றார்.ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் இழுத்து சென்றது. காரையும் நிறுத்தவில்லை. காரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் கவியரசி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த கும்பலை சேர்ந்தவர்கள் காரை நிறுத்தாமல் கவியரசியை சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு சாலையில் தரதரவென இழுத்து சென்றனர்.

இந்த கொடூர காட்சியை பார்த்த அவருடைய தங்கை மற்றும் தோழிகள் கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததால், உதவிக்கு யாரும் வரவில்லை. இந்த நிலையில் பஸ் ஒன்று எதிரே வந்தது. இதை பார்த்த அந்த கும்பல், கவியரசியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இந்த கோர சம்பவத்தினால் படுகாயமடைந்த கலையரசி, காரைக்கால் மருதாதுவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேற்கொண்டு சிகிச்சை பெறுவதற்கு திருவாரூர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் கலையரசி உயிரிழந்தார்.

காரில் கடத்தி செல்ல முயன்றதில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை பொறையாறு போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். யாரையும் கைது செய்யவில்லை.

நேற்று அப்பகுதி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் பொறையாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நாம் மக்கள் இயக்க மாநில தலைவர் வழக்கறிஞர் சங்கமித்திரன் மற்றும் கவியரசியின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.