கடற்கரை சாலையில் அதிவேகம்! கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்த விபத்தில் இளம் தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்! உயிருக்கு போராடும் 2 குழந்தைகள்!

சாலையோரத்தில் இருந்த ஜெனரேட்டர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்த சம்பவமானது கிழக்கு கடற்கரை சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் புளியந்தோப்பு என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தமிழ்மாறன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு மொத்தம் 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் குடும்ப விழாவிற்காக உறவினர்களுடன் மாமல்லபுரத்துக்கு கிழக்கு கடற்கரை சாலை வாயிலாக காரில் சென்றுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து கார் விலகியுள்ளது.

எவ்வளவு முயன்றும் காரை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஜெனரேட்டர் மீது கார் வேகமாக மோதியுள்ளது. 

மோதிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே தமிழ்மாறனும், ஸ்வேதாவும் உயிரிழந்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த தம்பதியினரின் 2 குழந்தைகள் உட்பட 5 பேரையும் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவமானது கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.