நடுரோட்டில் இரும்பு ராடால் இளைஞனை வெளுத்த இளம் பெண்! அதிர வைக்கும் காரணம்!

சண்டிகார்: தனது கார் மீது உரசிய இன்னொரு காரின் உரிமையாளரை ஆபாச வசைபாடியதோடு, இரும்பு ராடால் தாக்கிய இளம்பெண், பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.


சண்டிகார் ட்ரிபியூன் சவுக் அருகே, சாலையில் இரண்டு கார்கள் ஒன்றாக வந்திருக்கின்றன. இதன்போது, முன்னால் சென்ற காரை இளம்பெண் ஒருவர் ஓட்டியுள்ளார். பின்னால் வந்த காரை இளைஞர் ஒருவர் ஓட்டியுள்ளார். ஓரிடத்தில், அந்த இளம்பெண் காரை ரிவர்ஸ் எடுக்க முயன்றதாகவும், அதற்கு வழிவிடாமல் இளைஞர் பின்னாடியே தனது காரை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அந்த பெண்ணின் கார் மீது லேசான கீறல்கள் விழுந்துவிட்டதாம். உடனே, ஆத்திரமடைந்த அவர் கையில் இரும்பு ராடை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி ஓடிவந்தார்.

குறிப்பிட்ட இளைஞரை செல்ல விடாமல் வழிமறித்து, ஆபாசமாக வசைபாடியபடி, அவரை அடித்ததோடு, காரையும் தாக்கினார். இதில், நிதிஷ் என்ற அந்த இளைஞர் காயமடைந்தார். உடனடியாக, விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் மொஹாலியை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஷீத்தல் சர்மா என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர் மீது வழக்குப் பதிந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் ஜாமினீல் விடுவித்தனர். காயமடைந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்தனர். 

ஆண்கள்தான் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்ற நிலையில், பெண் ஒருவர் இரும்பு ராடை வைத்து வெறியுடன் வன்முறையில் ஈடுபட்ட இந்த வீடியோ தற்போது, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.