கனடாவில் கடந்த 30 ஆண்டுகாலமாக தன்னிடம் வரும் பெண் நேயாளிகளுக்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆடைகளை கழட்டு..! கவிழ்ந்து படு..! ஒரு கட்டத்தில் மார்பகத்தில் ஊசி! பெண் நோயாளிகளுக்கு ஆண் டாக்டரால் ஏற்பட்ட பகீர் அனுபவம்!
கனடா நாட்டின் கால்கரியில் நரம்பியல் நிபுணராக இருப்பவர் கெயித் ஹோட்டே. இவர் கடந்த 30 ஆண்டுகளாக தன்னிடம் சிகிச்சை வந்த 28 பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை தந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. தலைவலி, தலை சுற்றல் என எந்த காரணத்துடன் வந்தாலும், நிர்வாணப்படுத்தி சோதித்திருக்கிறார் அவர்.
மார்பகங்களை தொடுவது, ஊசியால் குத்துவது, ஆடைகளை வலுக்கட்டாயமாக அகற்றுவது என இன்பம் கண்டுள்ளார் அவர். ஒரு பெண்ணின் மார்பகங்களை அவர் பிடித்தபோது, அந்த பெண் தடுத்திருக்கிறார். அதற்காக அவர் கடுமையாக கோபப்பட்டுள்ளார் . இதனால் அவரிடம் சிகிச்சைக்கு சென்ற பெண்கள் குழப்பமும், அவமானமும், கோபமும் அடைந்தவர்களாக மாறிவிட்டனர்.
1991ம் ஆண்டு முதல் தற்போது வரை பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவராக புகார் அளிக்க, தற்போதுதான் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. 28 பெண்கள் அளித்த புகாரில் தற்போது சிறைக்கு சென்றுள்ளர் மருத்துவர். அவருக்கு ஜனவரி 17ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.