இருமல் இருக்கும்போது பம்பளிமாஸ் பழம் சாப்பிடலாமா ??

சூப்பர் மார்க்கெட் போன்ற ஒருசில இடங்களில் மட்டும் பம்பளிமாஸ் பழம் பார்த்திருப்பீர்கள். சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்த இந்தப் பழத்தில் என்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.


·         உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் இந்த பழங்களில் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதுநீண்ட ஆயுளையும் கொடுக்கும்.

·         இந்தப் பழத்தில் வைட்டமின் சத்து அதிகமாக இருப்பதால் கேரட் போலவே கண்களை பாதுக்காக்கிறது.

·         வெப்பத்தில் வேலை செய்பவர்கள் பம்பளிமாஸ் பழச்சாறு குடித்து வந்தால், உடல் சூடு தணியும். ரத்த சோகையைப் போக்கும் குணமும் உண்டு.

·         இது குளிர்ச்சி நிறைந்தது என்பதால் சளி, இருமல் இருக்கும்போது சாப்பிடக்கூடாது.