மத்திய அரசு 25 லட்சம் மாணவர்கள் நலனுடன் விளையாடலாமா..? சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம்.

மோடியின் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே பேசுவார் என்று சுப்பிரமணியன் சுவாமியை சொல்லிவிட முடியாது. அவ்வப்போது சேம் சைடு கோல் போடுவார்.


அப்படித்தான் பொருளாதாரம் விஷயத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தொடர்ந்து ட்வீட் போட்டு தொந்தரவு கொடுத்துவருகிறார்.

அதேபோன்று, நீட் தேர்வு இப்போது நடத்தவேண்டிய அவசியம் இல்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் போட்டிருக்கும் ஒரு ட்வீட்டில், செப்டம்பர் மாதம் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் நடத்துவதன் மூலம் 25 லட்சம் மாணவர்கள் நலனுடன் விளையாடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சிகள் போராட வேண்டிய விஷயங்களை எல்லாம் சுப்பிரமணிய சுவாமியே செய்துகொண்டு இருக்கிறார். நீதிமன்றம் இந்த விஷயத்தில் என்னதான் முடிவு எடுக்கிறது என்று பார்க்கலாம்.